Wednesday, February 27, 2008

21 வது வார்டு இடைத்தேர்தல்

அதிராம்பட்டினம் 21 வது வார்டு இடைத்தேர்தல் நடந்ததலில் திமுகவைச் சார்ந்த முஹம்மது இப்றாஹிம் வெற்றிபெற்றார். எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் முஹம்மது தமீம் அவர்கள் 13 ஒட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர் மெயின் ரோடு பள்ளி நிர்வாகியாக உள்ளார். பள்ளிவாசல் காரணத்தை வைத்து வெற்றிபெற்று விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் தோல்வி தான் முடிந்தது.
எப்படியாவது அதிமுக அதிரையில் கால் வைத்து விடலாம் என்று கனவு நினைத்தார்கள்.

பள்ளிவாசல் பிரச்சனைகளை பொறுத்தவரை குறிப்பிட்ட மதப்பிரச்சனையாக்கிவிட அதிமுக, பாஜக, பல விஷ அமைப்புகள் பிரச்சனைகளை கிளப்பின.
இதில் வெற்றி பெற்றது பல அமைப்புகள் என்று தன்னைதான் மார்த்தட்டிகொண்டன.

ஆனால் கடந்த தேர்தலில் அதிமுக தான் பாஜகவை வளர்த்து விட்டது. செட்டித்தெரு வார்டில் அதிமுக வின் சார்பாக யாரெயும் நிறுத்த வைக்க தைரியம் இல்லாத அதிமுக அரசியல்வாதிகளுக்கு துணை போகும் அதிரையில் உள்ள குறிப்பிட்ட தெரு வாசிகள்.

அதிமுக முஹம்மது தமீம் அவர்கள் இன்றைக்கு பள்ளிவாசலுக்காக பேச்சி கூடுத்து வருகிறார்.ஆனால் இவரின் பல முகங்களை யாரும் பார்த்ததில்லை என்று தான் கூறவேண்டும். கட்சிக்காக இவர் எதையும் செய்யக்கூடியவர்.


அதிமுக‌ வின் உறுதுணையாக‌ இருந்த‌து இஸ்லாமிய‌ அமைப்புக‌ள்தான். திமுக‌ விற்கு துரோக‌ம் செய்யும் த‌முமுக‌ அமைப்பு. அதிரைக்கென்று உறுத்தான‌ அமைப்பு என்று அவ‌ர்க‌ளே கூறிக்கொள்ளும் அவ‌மான‌ம். ப‌ள்ளிவாச‌ல் பிர‌ச்ச‌னைக்காக‌ த‌ங்க‌ள‌து ப‌த‌விக‌ளை தூக்கியெரியாத‌ த‌முமுக‌ தொண்ட‌ர்கள் படை.





அத‌ற்கு அடுத்த‌ப‌டியில் ஹிமாய‌த்துல் இஸ்லாம் ச‌ங்க‌ம் எப்ப‌வும் உள்ள‌ ஒரு ல‌ட்ட‌ர் பேடில், அர‌சிய‌லுக்கும் இடைத்தேர்த‌லுக்கும் வெளியில் உள்ள‌ அதிரை பைத்துல்மால் வ‌ம்ப்பிற்கு இழுத்த‌ ச‌ங்க‌ம்.

புரியாத‌ புதிர் என்ன‌வென்றால் குஜராத் முத‌ல்வ‌ர் மோடிக்கு எதிராக‌ போர‌ட்ட‌ம் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள், அதிமுக‌ விட்டுவ‌ரைவ‌ந்து சாப்பிட்டில் அம்மாவுட‌ன் க‌ல‌ந்து கொண்டு ஆட்ட‌ம் போட்ட‌வ‌ர்க‌ளுக்கு இவ‌ர்க‌ள் எல்லாம் துணை நிற்கிறார்க‌ள்.

முஹ‌ம்ம‌து த‌மீம் அவ‌ர்க‌ள் சுயேட்டையாக‌ நின்று இருந்தால் வெற்றி பெறுவ‌து உறுதி என்று தான் கூற‌வேண்டும். மாநில‌ த‌முமுக‌ த‌லைமைய‌க‌த்தில் இருந்து அதிரை த‌முமுக‌ விற்கு போன் வ‌ந்த‌த‌காக‌ கூற‌ப்ப‌டுகிற‌து. கூட்ட‌ணியில் இருந்து கொண்டு துரோக‌ம் செய்யும் க‌ட்சியாகிவிட்ட‌து என்ற பெய‌ர் வ‌ந்து விட்ட‌து.

0 comments: