Saturday, January 05, 2008

கார் டிரைவர் தற்கொலை

0 comments
அதிராம்பட்டினம் கரையூர் தெருவைச்சார்ந்த மைனர் என்பவர் வயது30. இன்று 05/01/08, இரவு 7.30 மணிக்கு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் அதிரை பஸ் ஸ்டாண்டில் உள்ள டெக்ஸிமார்க்கெட்டில் கார் ஓட்டுனாராக உள்ளார். தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சனை மற்றும் கார் ஸ்டாண்டில் உள்ள மற்ற ஒட்டுனர்கள் கிண்டல் செய்ததால் வந்த விபரீதம். இதுபற்றி அதிராம்பட்டினம் காவல்துறை வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரித்து வருகினறனர்.

காதீர் முகைதீன் கல்லூரி

0 comments


அதிராம்பட்டினத்தில் இயங்கிவரும் காதீர் முகைதீன் கல்லூரி ஒரு சிறப்புவாய்ந்த கல்லூரி ஆகும்.உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்,வெளிமாநில மாணவ,மாணவிகள் சுமார் 1500 பேர் படித்து வருகின்றனர். பல பட்டப்படிப்புகள்,மேற்படிப்புகளும் உள்ளன.

கல்லூரியில் அதிகமான மாணவர்கள் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச்சார்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர். கல்லூரியில் சேரும்போது 1997ம் ஆண்டு பி.காம்,பிபிஏ,பி.எஸ்சி,ஆகிய இளநிலைபட்டபடிப்புக்கு நன்கொடையில்லாமல் சேர்த்து வந்தார்கள்.



ஆனால் மத்திய அரசின் நாக் கமிட்டியின் சார்பாக வழங்கப்பட்ட பி++
ஸ்டார் என்ற அந்தஸ்து.இதனால் கல்லூரியின் தரம் உயர்ந்து உள்ளது என்று நினைக்காதீர்கள்,மாணவ,மாணவிகளின் கல்லூரி கட்டணம் தான் உயர்ந்தது.இதனால் பல மாணவர்கள் கல்லூரியை விட்டு வேறு கல்லூரிக்கு சென்றதை நாம் பார்கக முடிகிறது.

மாணவர்கள் கல்லூரி முதல்வர் சந்தித்தார்கள் பலன் இல்லை.அடுத்த முயற்சி கல்லூரி தாளார்.அஸ்லம் அவர்களை சந்தித்தார்கள். ஆனால் பணம் கட்டினால்தான் படிக்கலாம் இல்லையென்றால் படிப்பை நிறுத்தி விடுங்கள் என்ற வார்த்தையினால் மாணவர்கள் போரட்டட்த்தில் ஈடுபட்டனர்.
கல்லூரிக்கு எதுவும் செய்யாத நிர்வாகம் தேவையா என்று தோன்றுகிறது.
பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள நிர்வாகத்தை கேட்க யாரும் ஊரில் இல்லை என்பதை காட்டுகிறது.
அரசு வேலை என்ற பெயரில் கணிததுறை அப்பாஸ், தமிழ்துறைகபீர்,வரலாற்றுத்துறை சபீரா பேகம் ஆகியோரிடம் 1 லட்சம் வாங்கியது கல்லூரி நிர்வாகம்.




ஆனால் மாணவர்களின் நலனில் அக்கரையில்லாமல் உள்ளது கல்லூரி நிர்வாகம். கணிப்பொறி துறையில் சரியான கம்ப்யூட்டர் கிடையாது,அதேபோல சரியான வகுப்பு கிடையாது அரபித்துறைக்கு,சரியான லேப் கிடையாது வேதியியல் துறைக்கு, பல திட்டங்கள் செயல்படுத்தாமல் உள்ளது.கம்ப்யூட்டர்க்கு தேவையான ஜெனரட்டர் வசதி கிடையாது.
பல வசதிகளை செய்தவுடன் மாணவர்களிடம் வாங்கட்டும் கல்லூரி தொகைகளை.
இதைனை கேட்பதற்கு யாரும் இல்லையா !


குறைகள் இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும் : adirampattinam@rediffmail.com