எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்ற இளைஞசர்களுக்குக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற விரும்புவோர் கல்வித்தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும்.மனுதரார் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் 2007 டிசம்பர்31 அன்று 45 வயதை கடந்தவராக இருக்க கூடாது.இதர வகுப்பினர் அதேபோன்று 40 வயதை கடந்தவராக இருக்க கூடாது.மனுதாரர் குடும்ப வருமானம் மாதம் ரூபாய் 2 ஆயிரத்திற்கு அதிகமாக இருத்தல் கூடாது. மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி மாணவ,மாணவியராக இருத்தல் கூடாது.தொலைத்தூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். சுயமாக எவ்வித சுயதொழில் செய்பவராகவோ பணம் ஈட்டுபவராகவோ இருத்தல் கூடாது. விண்ணப்ப படிவங்கள் அலுவலக நாளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படும்.2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அனைத்து அலுவலக நேரங்களிலும், அனைத்து நாட்களிலும் மனுதாரர் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவம் பெற வருவோர் வேலைவாய்ப்பு அடையாள அட்டை,பள்ளி,கல்லூரி சான்றிதழ்,மாற்று சான்று ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இத்தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகள் ஆகியும் வேலையில்லாத இளைஞர்கள் இந்த உதவித்தொகைகான விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுக்கும்படி கேட்டுகொள்கிறோம்.
Browse » Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment