Sunday, February 10, 2008

காதிர் முகைதீன் பள்ளியின் சில்வர் ஜுப்லி விழா



அதிராம்பட்டினத்தில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கி 25 ஆண்டுகள் முடிவடைந்தது முன்னிட்டு இன்று காதிர் முகைதீன் கல்லூரி வளகத்தில் பல நிகழ்ச்சிகளும்,சொற்பொழிவுகளும் நடைப்பெற்றது.10.02.08 இன்று காலை 10.00 மணிக்கு பள்ளி ஆண்டு விழா நடைபெற உள்ளது. சில்வர் ஜுப்லியை முன்னிட்டு காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒளி விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை எல்லாம் பள்ளி ஆசிரியர்கள் செய்து உள்ளனர்.

இதே போல் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த 28.01.08 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்வணைத்து விழாக்களுக்கும் பள்ளி தாலாளர் முஹம்மது அஸ்லம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்து

0 comments


அதிராம்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்து விடப்பட்டுள்ளது. இப்பேருந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து காலை 8.40 மணிக்கும் இரவு 8.10 மணிக்கும் கும்பகோணம் வழியாக அதிராம்பட்டினம் செல்கிறது.அதேபோல் அதிரையில் இருந்து காலை 8.10 மணிக்கும் இரவு 9.00மணிக்கும் கும்பகோணம் வழித்தடத்தில் செல்கிறது.
பேருந்து துவக்க விழாவில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ,என்.ஆர்.ரெங்கராஜன்,அதிரை சேர்மன் எம்.எம்.எஸ்.அப்துல்வஹாப் கும்பகோணம் அரசு பேருந்துகோட்ட மேலாளர்,அதிரை வார்டு கவுன்சிலர்கள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கட்டணத் தொகை 200 ரூபாய்.