Sunday, February 10, 2008

தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்து



அதிராம்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்து விடப்பட்டுள்ளது. இப்பேருந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து காலை 8.40 மணிக்கும் இரவு 8.10 மணிக்கும் கும்பகோணம் வழியாக அதிராம்பட்டினம் செல்கிறது.அதேபோல் அதிரையில் இருந்து காலை 8.10 மணிக்கும் இரவு 9.00மணிக்கும் கும்பகோணம் வழித்தடத்தில் செல்கிறது.
பேருந்து துவக்க விழாவில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ,என்.ஆர்.ரெங்கராஜன்,அதிரை சேர்மன் எம்.எம்.எஸ்.அப்துல்வஹாப் கும்பகோணம் அரசு பேருந்துகோட்ட மேலாளர்,அதிரை வார்டு கவுன்சிலர்கள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கட்டணத் தொகை 200 ரூபாய்.

0 comments: