Thursday, February 14, 2008

முதலமைச்சர் அவர்களின் முக்கிய கவனத்துக்கு

0 comments
தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சட்ட விரோதமாகக் கோயிலைக் கட்டி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தஞ்சை திராவிடர் கழகத்தின் சார்பில் - கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்குப் புகார் கொடுக்கப்பட்டது. கோயில் கட்டும் பணியை நிறுத்திவிட்டதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் அதிகாரப்பூர்வமாக பதில் எழுதியதற்குப் பிறகும்கூட, கோயில் கட்டும் பணி தொடர்கிறது. கல்லூரி முதல்வரின் இந்தச் செயல்பாடு சரிதானா?

துபாய் மோட்டார் விபத்து

0 comments
துபாய் 10/02/08 அன்று மோட்டார் விபத்து
அதிரையைச் சேர்ந்தவர் விபத்தில் உயிரிழந்தார். மேலத்
தெருவைச்சார்ந்த புகாரி என்பவர்
மோட்டார் விபத்தில் இறந்தார்
இவர் அன்சாரி என்பவரின்
மச்சான் ஆவார்.அன்னாரின் நல்ல
அடக்கம் நேற்று அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளியில் 13/02/08 anru
நல்ல அடக்கம் செய்யப்பட்டது.

துபாயில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க உதவும் இணையத்தளம்

0 comments
துபாயில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்குமிட வசதி குறைபாடு, சம்பளம் தராமை உள்ளிட்ட தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கீழ்க்கண்ட இணையத்தளம் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

www.labourcomplaints.ae

புகார் தெரிவிக்க தொலைபேசி எண் : 800 9119

மேலும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.