அஸ்ஸலாமு அலைக்கும். நமதூர் இளைஞர்களுக்கு வழிகாட்ட என்னால் முடிந்த ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன். இந்தக் கட்டுரையை நமது அதிராம்பட்டினம் வெப்சட்டில் போட்டால் மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும். பிழை இருந்தால் தயவு செய்து திருத்தம் செய்து போடவும். உங்கள் கருத்தையும் பதில் போடவும்.
S.Abdul Razzak
கல்வி வழிகாட்டித் தொடர் (1)
வெளிநாட்டு மோகமும் ஆங்கிலப் புலமையும்.
20-30 வருடங்களுக்கு முன்பெல்லாம் உள்நாட்டில் வேலைச் செய்ய தகுதி இல்லாதவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வர். எல்லோரையும் போலவே நமதூர் (அதிரை) மக்களையும் வெளிநாட்டு மோகம் ஆட்டிப் படைத்தன் விளைவு! படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சவுதிக்கு சென்ற நமது முந்தைய தலலமுறையினர் தற்போது ரிட்டையராகி தாயகம் திரும்பி இருப்பார்கள்.
வளைகுடா அனுபங்களை வைத்து அரபி மொழியிம் ஹிந்தி/உருது மொழியும் கற்றுக் கொண்டவர்கள் ஓரளவு வெவ்வேறு நாடுகளில் சமாளித்துக் கொள்வார்கள். உள்நாட்டிலும் உபரியான மொழியாளுமைகளால் பிழைத்துக் கொள்ளலாம்.
தற்போதைய அயல் நாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லும் முன் படிப்பு, மொழித்திறன் ஆகியவற்றில் சர்வதேச தரத்தில் இருந்தால் மட்டுமே வேலைக்கு எடுக்கிறார்கள். ஆங்கிலம் பயிற்று மொழியாக எடுத்து படித்திருந்தாலும் உலகத்தரம் வாய்ந்த சர்டிபிகேட் பெற்றிருந்தால்தான் அமெரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலைக்கு நியமிக்கப்படுவார்கள்.
வணிக உலகில் இன்று பெரும்பான்மையாகக் கையாளப்படும் மொழியாக ஆங்கிலம் விளங்குகின் றது. வணிக உலகில் தேவை மட்டுமின்றி உயர் கல் விக்காகவும் இன்று அதிகளவில் நமது நாட்டிலி ருந்து நாடுவது ஆங்கிலத்தை மொழியாகக் கொண்ட இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரே லியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து நாடுகளே ஆகும். இதற்கு பல்வேறு காரணங்கள் அடிப்படை யாக உள்ளது. அவ்வாறு உயர்கல்விக்காகச் செல்ப வர்கள் ஆங்கிலத்தில் போதிய அறிவுத் திறன் படைத் தவர்களா என்பதைக் கண்டறியவும், அதனைச் சோதிக்கும் வகையில் பல தேர்வுகளை நடத்தி வரு கின்றது.
அவ்வரிசையில் முதன்மையாக விளங்குவது டோஃ பல் மற்றும் ஐ.சி.எல்.டி.எஸ். தேர்வுகளாகும். இதில் அமெரிக்காவின் உயர்கல்வி சேர்க்கைக்கும் தகுதித் தேர்வாக விளங்குவது டோஃபல் தேர்வாகும். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கான உயர்கல்வி சேர்க்கைக்குத் தேவைப்படுவது ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வாகும்.
இத்தேர்வுகளைப் போல வணிக உலகின் தேவைக்காகவும் பல தேர்வுகள் நடத்தப்படுகின்றது. அதில், முதன்மையானதாகக் கருதப்படுவது பி.இ.சி. எனப்படும் பிசினஸ் இங்கி லீஷ் சர்ட்டிஃபிகேட். இதை கேம்பிரிட்ஜ் பிசினஸ் இங்கி லீஷ் சர்ட்டிஃபிகேட் தேர்வு என்றும் அழைப்பர்.
இத்தேர்வானது உலக வணிக அரங்கில் நடக்கும் வியா பாரங்களில் பேச்சு மொழியாகவும், அலுவலக மொழியாக வும் ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டுள்ள வியாபார நிறுவ னங்களில் பணிபுரிய இதை ஓர் அடிப்படைத் தகுதியாகப் பல பன்னாட்டு நிறுவனங்கள் இதர தேவையான கல்வித் தகுதியுடன் சேர்த்து வைத்துள்ளது. எனவே, இதன் முக்கி யத்துவத்தை அறிந்து பல பன்னாட்டு நிறுவனங்கள் மற் றும் இந்திய பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நிறுவன ஊழியர்கள் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக வைத்துள்ளது மட்டுமன்றி, அவர்களே இத்தேர்வுக்கும் ஊழியர்களை ஆயத்தம் செய்து தேர்ச்சிய டைய பயிற்சியளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுள்ள உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கையின் படி ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டில் முதலீடு செய்து தொழில் தொடங்குகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்குத் தேவைப்படும் தொழில் நுட்ப அறிவு மற்றும் கல்வியறிவு பெற்றவர்கள் தேவையான அளவில் இருந்தாலும் போதிய ஆங்கில அறிவும் தேவைப்ப டுகிறது. குறிப்பாக, ஐ.டி.இ.எஸ். எனப்படும் "இன்ஃபர்மே ஷன் எனேபல்டு சர்வீஸஸ்' துறை மற்றும் வர்த்தகம் துறைக ளில் இவர்களின் தேவை அதிகம். இத்தகைய நிறுவனங்க ளில் உடனடி வேலைவாய்ப்புப் பெற உங்களது பட்டப் படிப்பு, இதர பட்டப் படிப்பு கல்வித் தகுதிகளுடன் பிசினஸ் இங்கிலீஷ் சர்டிஃபிகேட் அத்தியாவசியமாகிறது.
பி.இ.சி. அடிப்படையில் ஒருவரின் மொழியின் அத்தியா வசிய நான்கு அடிப்படைகளைச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது.1. கேட்பு திறன் 2. பேச்சுத் திறன் - 3. படிக்கும் திறன் 4. எழுத்துத் திறன்.
இத்தேர்வுக்கென பயிற்சிகளைப் பெறும் போது மேற்கூறிய நான்கு பிரிவுகளிலும் உங்களின் நிலையினை மேம்படுத்த பெரிதும் உதவும். அதுமட்டுமின்றி, இந்த நான்கு நிலைகளின் அடிப்படையில் ஆங்கில அறிவினைப் பிரத்யேகமாக வர்த்தக உலகில் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என் பதை உணர்த்தும். இத்தேர்வே வர்த்தக உலக வழக்கின் அடிப் படையில் அமைந்திருப்பதால் எவ்வளவுதான் ஆங்கிலத்தில் புலமையும், இலக்கணமும் அறிந்திருந்தாலும் அதனை வர்த்த உலகின் நிலைப்பாட்டில் எவ் வாறு பயன்படுத்தப்பட வேண்டுமென்கிற வகையில் வகைபடுத்தப்பட்டிருக்கும்.
பி.இ.சி. தேர்வுகள் மூன்று நிலைகளைக் கொண்டவை.
1. பி.இ.சி. பிரலிமினரி .
2. பி.இ.சி. வான்டேஜ்
3. பி.இ.சி. ஹையர்
மேற்கூறிய மூன்று நிலைத் தேர்வுகளில் உங்களின் தேவை மற்றும் தொழில்நிலைக்கேற்ப ஏதே னும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.பி.இ.சி. தேர்வினை 16 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் எதிர்கொள்ளலாம். வர்த்தக தொழிலில் ஈடுபட உள்ளவர்கள் அல்லது வர்த் தக உலகில் பணிபுரிய எண்ணுபவர்களுக்கு இது அத்தியாவசியமாகும்.
மேற்கூறிய மூன்று நிலைத் தேர்வுகளும் மொழியின் தேர்வு நிலையறியும் ஐரோப்பாவின் வரைமுறைகளுக்கு உட்பட்டவை. அது மட்டு மின்றி, இத்தேர்வுகள் இங்கிலாந்தின் தேர்வு களை வரைமுறைப்படுத்தும் ணஇஅ- தரச் சான்றி தழ் பெற்றுள்ளது.
இத்தேர்வின் மிகப் பெரிய பலம் என்னவெ னில் பி.இ.சி. தேர்வுகளை எதிர் கொண்டு தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்குச் சான்றிதழ் உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக இசால் தேர்வுகள் வழங்குகின்றது. இச்சான் றிதழ் நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப் படையில் நிலையினைக் குறிக்கும். இத்துடன் முன்னரே தெரிவித்துள்ளது போல் நான்கு பிரிவு களில் நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களின் திறமையைக் குறிக்கும் வகையில் அமைந்திருக் கும். இதனை அடிப்படையாகக் கொண்டு உங்களின் ஆங் கில மொழித் திறனை மேலும் மேலும் உயர்த்திக் கொள்ளலாம்.
-தொடரும் (இன்ஷா அல்லாஹ்)
வேண்டுகோள்: வெளிநாட்டுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு வழிகாட்ட அதிரையில் பயிற்சி மையம் தொடங்க செல்வந்தர்களும் கல்விமான்களும் உதவலாம். இதற்கு அதிரை பைத்துல்மால் போன்ற சேவை நிறுவனங்களையும், அதிரை பட்டதாரிகள் பேரவையையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
Thanks : Razzak ,
mail : adirainews@gawab.com
நன்றி : கான் பிரதர்ஸ், அதிரை
Tuesday, January 22, 2008
கல்வி வழிகாட்டித் தொடர் (1)
Labels:
கல்வி வேலைவாய்ப்பு
![](https://lh3.googleusercontent.com/-S6736xnCEVA/AAAAAAAAAAI/AAAAAAAAGLk/uPZqjgOzSYA/s250-c/photo.jpg)
About Author:
My self Nitin Maheta(Nitzzz) From India. i love to blogging, Desing Blogger template, Web Developing and Designing.i like to learn and share technical hacking/security tips with you,i love my friends.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Good this article need for our students .. i appreciate Brother Abdul razak.
Post a Comment