Wednesday, February 27, 2008

ஊனமுற்றோர்க்கு ஓர் வேண்டுகோள் !

2 comments
அன்புடையீர்,
கை,கால் ஊனமுற்றோர்,மனவளர்ச்சிக் குன்றியோர்கள் கண் பார்வை இழந்தோர்கள்,காது கேளாதோர்,வாய் பேசமுடியாதோர் போன்ற அனைத்து ஊனமுற்ற மக்களுக்கும் மறு வாழ்வு தரும் திட்டமாக தமிழ்நாடு அரசு ஊனமுற்றோர்கையேடு என்ற படிவத்தையும் உடன் அப்ளிகேசன் படிவத்தையும் வெளியிட்டுள்ளது.இந்த படிவத்தை படித்து முறையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தால் ஊனமுற்ற மக்கள்,அரசின் சலுகைகளைதங்கு தடையின்றி பெறலாம்.ஊனமுற்றோர்க்கு,இவ்விசயத்தில் உதவ அதிரை பைத்துல்மால் முன் வந்துள்ளது. படிவம் பூர்த்தி செய்யும் இடம் : அதிரை பைத்துல்மால்,23/1. நடுத்தெரு, அதிராம்பட்டினம்.

அரசு வெளியிட்டுள்ள இப்படிவங்களை ஊனமுற்ற மக்கள் பயன்பெற அதிராம்பட்டினத்தைச்சார்ந்த கீழ்க்கண்ட முகவரியில் வசிக்கும்,,,

அ.பஹாத் முஹம்மது
(ஊனமுற்றோர் நலச்சங்கம் செயலாளர்)
14/9.வெற்றிக்காரத்தெரு
அதிராம்ப‌ட்டின‌ம்
செல் : 9865939831

ப‌க்ருதீன்.அ
அதிரை பைத்துல்மால் இணைசெய‌லாள‌ர்
அதிராம்ப‌ட்டின‌ம்
செல் : 9443617330

குறிப்பு : அப்ளிகேசன் பெற வரும்போது கீழ்க்கண்ட படிவங்கள் உள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ளவும்.

1. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
2.ஊன‌முற்றோர் அடையாள‌ அட்டை(இருந்தால்)
3.ரேச‌ன்கார்டு ஜெராக்ஸ்
4.தேர்த‌ல் அடையாள‌ அட்டை(இருந்தால்)

அனைவ‌ரும் ஊன‌முற்றோர் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு இதை தெரிவிக்க‌ வேண்டுகிறோம்.

21 வது வார்டு இடைத்தேர்தல்

0 comments
அதிராம்பட்டினம் 21 வது வார்டு இடைத்தேர்தல் நடந்ததலில் திமுகவைச் சார்ந்த முஹம்மது இப்றாஹிம் வெற்றிபெற்றார். எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் முஹம்மது தமீம் அவர்கள் 13 ஒட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர் மெயின் ரோடு பள்ளி நிர்வாகியாக உள்ளார். பள்ளிவாசல் காரணத்தை வைத்து வெற்றிபெற்று விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் தோல்வி தான் முடிந்தது.
எப்படியாவது அதிமுக அதிரையில் கால் வைத்து விடலாம் என்று கனவு நினைத்தார்கள்.

பள்ளிவாசல் பிரச்சனைகளை பொறுத்தவரை குறிப்பிட்ட மதப்பிரச்சனையாக்கிவிட அதிமுக, பாஜக, பல விஷ அமைப்புகள் பிரச்சனைகளை கிளப்பின.
இதில் வெற்றி பெற்றது பல அமைப்புகள் என்று தன்னைதான் மார்த்தட்டிகொண்டன.

ஆனால் கடந்த தேர்தலில் அதிமுக தான் பாஜகவை வளர்த்து விட்டது. செட்டித்தெரு வார்டில் அதிமுக வின் சார்பாக யாரெயும் நிறுத்த வைக்க தைரியம் இல்லாத அதிமுக அரசியல்வாதிகளுக்கு துணை போகும் அதிரையில் உள்ள குறிப்பிட்ட தெரு வாசிகள்.

அதிமுக முஹம்மது தமீம் அவர்கள் இன்றைக்கு பள்ளிவாசலுக்காக பேச்சி கூடுத்து வருகிறார்.ஆனால் இவரின் பல முகங்களை யாரும் பார்த்ததில்லை என்று தான் கூறவேண்டும். கட்சிக்காக இவர் எதையும் செய்யக்கூடியவர்.


அதிமுக‌ வின் உறுதுணையாக‌ இருந்த‌து இஸ்லாமிய‌ அமைப்புக‌ள்தான். திமுக‌ விற்கு துரோக‌ம் செய்யும் த‌முமுக‌ அமைப்பு. அதிரைக்கென்று உறுத்தான‌ அமைப்பு என்று அவ‌ர்க‌ளே கூறிக்கொள்ளும் அவ‌மான‌ம். ப‌ள்ளிவாச‌ல் பிர‌ச்ச‌னைக்காக‌ த‌ங்க‌ள‌து ப‌த‌விக‌ளை தூக்கியெரியாத‌ த‌முமுக‌ தொண்ட‌ர்கள் படை.





அத‌ற்கு அடுத்த‌ப‌டியில் ஹிமாய‌த்துல் இஸ்லாம் ச‌ங்க‌ம் எப்ப‌வும் உள்ள‌ ஒரு ல‌ட்ட‌ர் பேடில், அர‌சிய‌லுக்கும் இடைத்தேர்த‌லுக்கும் வெளியில் உள்ள‌ அதிரை பைத்துல்மால் வ‌ம்ப்பிற்கு இழுத்த‌ ச‌ங்க‌ம்.

புரியாத‌ புதிர் என்ன‌வென்றால் குஜராத் முத‌ல்வ‌ர் மோடிக்கு எதிராக‌ போர‌ட்ட‌ம் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள், அதிமுக‌ விட்டுவ‌ரைவ‌ந்து சாப்பிட்டில் அம்மாவுட‌ன் க‌ல‌ந்து கொண்டு ஆட்ட‌ம் போட்ட‌வ‌ர்க‌ளுக்கு இவ‌ர்க‌ள் எல்லாம் துணை நிற்கிறார்க‌ள்.

முஹ‌ம்ம‌து த‌மீம் அவ‌ர்க‌ள் சுயேட்டையாக‌ நின்று இருந்தால் வெற்றி பெறுவ‌து உறுதி என்று தான் கூற‌வேண்டும். மாநில‌ த‌முமுக‌ த‌லைமைய‌க‌த்தில் இருந்து அதிரை த‌முமுக‌ விற்கு போன் வ‌ந்த‌த‌காக‌ கூற‌ப்ப‌டுகிற‌து. கூட்ட‌ணியில் இருந்து கொண்டு துரோக‌ம் செய்யும் க‌ட்சியாகிவிட்ட‌து என்ற பெய‌ர் வ‌ந்து விட்ட‌து.

Amazon New Recruitment | Intas Recruits Freshers

0 comments
Amazon New Recruitment | Intas Recruits Freshers


PLUS: EDS Mphasis New Walk-in & eyantra Freshers Walk-in - Feb 28, 29


http://www.jobs- freshers. com/amazon_ feb27.htm


Good Luck

--
For Placement Papers Click Here

http://www.careeren clave.info/ placement_ papers/

Thursday, February 14, 2008

முதலமைச்சர் அவர்களின் முக்கிய கவனத்துக்கு

0 comments
தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சட்ட விரோதமாகக் கோயிலைக் கட்டி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தஞ்சை திராவிடர் கழகத்தின் சார்பில் - கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்குப் புகார் கொடுக்கப்பட்டது. கோயில் கட்டும் பணியை நிறுத்திவிட்டதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் அதிகாரப்பூர்வமாக பதில் எழுதியதற்குப் பிறகும்கூட, கோயில் கட்டும் பணி தொடர்கிறது. கல்லூரி முதல்வரின் இந்தச் செயல்பாடு சரிதானா?

துபாய் மோட்டார் விபத்து

0 comments
துபாய் 10/02/08 அன்று மோட்டார் விபத்து
அதிரையைச் சேர்ந்தவர் விபத்தில் உயிரிழந்தார். மேலத்
தெருவைச்சார்ந்த புகாரி என்பவர்
மோட்டார் விபத்தில் இறந்தார்
இவர் அன்சாரி என்பவரின்
மச்சான் ஆவார்.அன்னாரின் நல்ல
அடக்கம் நேற்று அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளியில் 13/02/08 anru
நல்ல அடக்கம் செய்யப்பட்டது.

துபாயில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க உதவும் இணையத்தளம்

0 comments
துபாயில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்குமிட வசதி குறைபாடு, சம்பளம் தராமை உள்ளிட்ட தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கீழ்க்கண்ட இணையத்தளம் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

www.labourcomplaints.ae

புகார் தெரிவிக்க தொலைபேசி எண் : 800 9119

மேலும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

Sunday, February 10, 2008

காதிர் முகைதீன் பள்ளியின் சில்வர் ஜுப்லி விழா



அதிராம்பட்டினத்தில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கி 25 ஆண்டுகள் முடிவடைந்தது முன்னிட்டு இன்று காதிர் முகைதீன் கல்லூரி வளகத்தில் பல நிகழ்ச்சிகளும்,சொற்பொழிவுகளும் நடைப்பெற்றது.10.02.08 இன்று காலை 10.00 மணிக்கு பள்ளி ஆண்டு விழா நடைபெற உள்ளது. சில்வர் ஜுப்லியை முன்னிட்டு காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒளி விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை எல்லாம் பள்ளி ஆசிரியர்கள் செய்து உள்ளனர்.

இதே போல் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த 28.01.08 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்வணைத்து விழாக்களுக்கும் பள்ளி தாலாளர் முஹம்மது அஸ்லம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்து

0 comments


அதிராம்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்து விடப்பட்டுள்ளது. இப்பேருந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து காலை 8.40 மணிக்கும் இரவு 8.10 மணிக்கும் கும்பகோணம் வழியாக அதிராம்பட்டினம் செல்கிறது.அதேபோல் அதிரையில் இருந்து காலை 8.10 மணிக்கும் இரவு 9.00மணிக்கும் கும்பகோணம் வழித்தடத்தில் செல்கிறது.
பேருந்து துவக்க விழாவில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ,என்.ஆர்.ரெங்கராஜன்,அதிரை சேர்மன் எம்.எம்.எஸ்.அப்துல்வஹாப் கும்பகோணம் அரசு பேருந்துகோட்ட மேலாளர்,அதிரை வார்டு கவுன்சிலர்கள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கட்டணத் தொகை 200 ரூபாய்.