Friday, January 11, 2008

அதிரையில் தவ்ஹீத் ஜாமத்தின் கண்டன ஆர்பாட்டம்

0 comments



அதிராம்பட்டித்தில் தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக 11/01/08 அன்று மாலை 5 மணி அளவில் குஜராத் முதல்வர் மோடி தமிழக வருகையை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடந்தது. இதில் இவ்வவைப்பின் தொண்டர்கள் பல்வேறு கோஷங்கள் மோடியை எதிர்த்தும்,ஜெயலலிதாவையும் எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர். பின் போலீசார் அனனவரையும் கைது செய்து அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். அங்கு மோடி மற்றும் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து கூட்டத்தில் எடுத்து கூறினர். மாலை 6.30 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.




பாரத் கல்லூரி தாலாளர் இரயிலில் அடிபட்டு இறந்தார்

0 comments
மகிழங்கோட்டையைச் சேர்ந்த நாடிமுத்து அவர்களின் மகன் கணேசன் என்பவர் 10/01/08 அன்று காலை 5.45 மணிக்கு வாக்கிங் செல்லும் போது தஞ்சையில் இரயிலில் அடிபட்டு இறந்தார். இவர் தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரி,நிர்வாகவியல் கல்லூர், மற்றும் இந்தியன் இன்ஸ்டியூட்ஆகியவற்றுக்கு தாலாளர் ஆவார். அனைத்து கல்லூரிகளையும் தஞ்சையில் நடத்தி வருகிறார்.இவர் பேராசிரியர் ஆவார்.

இவருக்கு விக்ரம் என்ற மகன் உள்ளார். அன்னாரின் இறுதி சடங்கு இன்று மாலை 3.மணிக்கு அவரது சொந்த ஊரான மகிழங்கோட்டையில் தகனம் செய்யப்பட்டது. ஏராளாமான சுற்று வட்டார பொதுமக்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய புதிய வருட பிறப்பு


நேற்று இஸ்லாமிய புதிய வருட பிறப்பு. அதிரையில் உள்ள தைக்காலில் 10 நாட்கள் சிறப்பு பயான் மற்றும் மெளத்து ஓதி ஏழை மக்களுக்கு உணவளிக்கப்படுகிறது.
அதிரையில் உள்ள இரண்டு தைக்கால்களிலும் இவை நடைபெறுகிறது கடைசி பிறை 10 ல் அனைத்தும் நிறைவுபெறுகிறது..

Thursday, January 10, 2008

அதிரை கடற்பகுதிகளை தஞ்சை சரக DIG ஆய்வு

1 comments
அதிராம்பட்டினத்தில் உள்ள கரையூர் தெரு,கடற்கரைத் தெரு,ஏரிப்புறக்கரை,கீழத்தோட்டம் ஆகிய கடல் பகுதிகளில் தஞ்சை சரக DIG ஆபாஷ்குமார்,எல்லா பகுதிகளையும் சோதனை நடத்தினார்.
விடுதலைப்புலிகளின் நடமாடுவதாக கூறப்படும் இவ்வேலையில் இவர் வருகை தந்து ள்ளார். மேலும் ராஜமடம் சோதனைச்சாவடிக்கு சென்று அங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டறிந்தார்



இதேபோல் மல்லிப்பட்டினம் கடற்படைத்தளத்திற்கு சென்று அனைத்து விவரங்களும் கேட்டறிந்தார். பின் அதிரையில் கட்டப்பட்டுவரும் கடற்படை காவல் நிலையத்தை பார்வையிட்டு தஞ்சை சென்றார்.
உடன் பட்டுக்கோட்டை எஸ்பி மருதப்பன்,அதிரை இன்ஸ்ப்பெக்டர்.கண்ணதாசன், துணை ஆய்வாளர்.மணிவண்ணன்,ஏட்டு பூமிநாதன் உடன் இருந்தனர்.

பட்டுக்கோட்டை அருகே டாக்டர் வெட்டப்பட்டார்

0 comments
மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டியை சார்ந்த பழனிவேல் என்பருக்கு கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.அருகே உள்ள மதுக்கூரில் டாக்டர்.தனபால் மருத்துவமனைக்கு வந்தனர்.டாக்டர் உடனே பட்டுக்கோட்டை செல்லுங்கள் என்னிடம் போதிய கருவிகள் இல்லை என்பதால் அங்கு செல்லுங்கள் என்றார்.
பட்டுக்கோட்டை போகும் வழியில் பழனிவேல் என்பவ ர் இ றந்தார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் டாக்டர் தனபாலை அரிவாளாலால் வெட்டப்பட்டார்.டாக்டர் உடனே பட்டுக்கோட்டை செல்லப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பத்தால் அதிர்ச்சி அடைந்த பட்டுக்கோட்டை சுற்று வட்டார டாக்டர்கள்,அனைத்து மெடிக்கல் நிர்வாகிகளும் மூன்று நாள் மருத்துவசேவை செய்யவில்லை. 09/1/08 அன்று மாலை பேரணி ஏற்பாடு செய்து பட்டுக்கோட்டை சுற்று வட்டார டாக்டர்கள்,மெடிக்கல் நிர்வாகிகள்,பாரமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து பேரணி ஆர்.டி.ஒ. அலுவலகம் வரை நடந்து சென்று வெட்டியவர்களை கைது செய்ய கோரியும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.



அதிராம்பட்டினத்திலும் அனைத்து டாக்டர்கள் போராட்டத்தினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கு உள்ளயினர்.

பட்டுக்கோட்டை டாக்டர் செல்லப்பன் அவர்களின் சகலைதான் மதுக்கூர் டாக்டர் தனபால் என்பவர் ஆவார்.

அதிராம்பட்டினத்தில் BSNL தொலைபேசிக்கான குறைதீர்க்கும் முகாம்

0 comments

அதிராம்பட்டினத்தில் BSNL PUBLIC TELEPHONE AND STD BOOTH ORGANIZATION அமைப்பின் முதன் முதலாக பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் சாரா மண்பத்தில் நடைபெற்றது. இதில் TANJORE BSNL GM,PRO, PKT And ADIRAI EXCHANGE OFFICERS கலந்து கொண்டனர். இதில்
ஏராளமான எஸ்.டி.டி மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை வரவேற்றார் இவ்வமைப்பின் தலைவர் பிரியம் சாகுல் ஹமீது அவர்கள், அடுத்து கடற்கரைத்தெரு சி.எம்.இப்ராஹிம் அவர்கள் முன்னுரை ஆற்றினார்கள். பல வற்றை எடுத்து கூறினார்கள்.



BSNL தஞ்சாவூர் தலைமை சத்தியநாரயணன் அவர்கள் BSNL அதிராம்பட்டினத்திற்கு பல சலுகைகளை வழங்கி வருவதாக கூறினார்கள்.

• அதிராம்பட்டினத்தில் 2 சப் கோப்புரங்கள் வைத்தது.
• ஆன்-லைன் கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
• டெலிபோன் பில் கட்டுவதற்கு எளிமையாக்க போஸ் ஆபிஸில் 2 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
• பிராண்பேண்ட் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
• வில் போன் கொடுக்கப்பட்டு வருகிறது.
• லைன்கள் சீராக கொடுக்கப்பட்டுவருகிறது.

என்று சத்தியநாரயணன் கூறினார்கள்.
அதிரை மக்களின் குறைகளை தெரிவிக்கும்படி கூறினார்கள்.



பின்வருமாறு கோரிக்கைகள் சொல்லப்பட்டன:

• லைன் மென்களை அதிகரிக்க வேண்டும்
• துணை கோட்ட பொறியாளர்கள் நியமிக்க வேண்டும்
• லைன்களில் ஏற்படும் இறைச்சல்
• லஞ்சம் வாங்கும் ஊழியர்கள்
• உடனே லைன் கொடுப்பதில்லை
• பிராண்பேண்ட் எண்ணிக்கையை அதிகரிப்பது
• கட்டண பில்களின் கூடுதலாக வசூலிப்பது
• Caller identification கொடுக்காமல் உள்ளது.


பின்வரும் கோரிக்கைகள் 2 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள்.
உடனே SD யாக வீரப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.



alt=""id="BLOGGER_PHOTO_ID_5153771134980996962" />
உடனே SD யாக வீரப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றும் கூடுதலான லைன்மென்கள்,உடனடி லைன்கள் கொடுக்கப்பட்டுவருகிறது.
பொதுமக்களின் குறைகளை எழுத்து பூர்வமாக வாங்கினார் மேலாளர்.

அதிராம்பட்டினம் தான் தமிழகத்தில் STD யில் 64% வருமானம் வருவதாக இது ரிக்கார்ட் என்று சொன்னவுடன் எல்லா STD ஊழியர்களும் சந்தோஷமாக காணப்பட்டனர்.

இறுதி நிகழ்வை சங்சசெயாலளர் அப்பியான் யூசுப் அவர்கள் ஆற்றினார்கள்.



Tuesday, January 08, 2008

அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையை

0 comments


அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. வாகனங்கள் அதிகமாக செல்லுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
மேலும் அனைத்து சாலைகளும் நெடுஞ்சாலைத்துறையினாரால்
சரிசெய்யப்பட்டுவருகிறது.


அதிராம்பட்டினம் தரகர் தெருவில் தேர்தல் முன்விரோதம்

0 comments
அதிராம்பட்டினம் தரகர் தெருவில் தேர்தல் முன்விரோதம் காரணமாக பல நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். தரகர் தெருவில் ‘எ’ என்ற பிரிவும், ‘பி’ என்ற பிரிவும் குரூப்காளாக செயல்பட்டுவருகின்றனர்.

இதனிடைய நடந்து முடிந்த பஞ்சாய்த்துபோர்டு தேர்தலில் மூன்று வார்டுகளில் ‘எ’குரூப் பெரும்பால இடங்களில் ஈடுபட்டு வெற்றி பெறச்செய்தனர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.

இதனிடைய ‘பி’குரூப்‘எ’குரூப்பில் உள்ள சிலர் மீது தாக்குதல் நடத்தினர். இப்போக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இப்போக்கினை அறிந்த பெரும்தலைவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாருக்கு இவ்விஷயம் அறிந்து இரு குரூப்பில் உள்ளவர்களை அலைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

சுமார் 2 வாரத்திற்கு முன்புதெருக்களில் ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கிகொண்டனர். சிலர் அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2 வாரத்திற்கு முன்பு

இதனால் அப்பகுதியில் ரிஸ்வர் போலீசார் குவிக்கப்பட்டு இன்று வாபஸ் பெற்றனர்.

பல தரகர்தெரு நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். அப்பெயர்கள் பின்வருமாறு :

குரூப் ‘எ’

1. அர்சாத்
2.னைநா முகம்மது
3.சுல்தான்
4.சுபைத்துல்லா
5.மீரா
6.ராஃபி
7.னைநாமஹம்மது
8.னைநாமுஹம்மது (கே.ம்)
9.நசீம்

குரூப் ‘பி’

1.அஹமது ஹாஜா
2.முஹம்மது காசிம்
3.ஷாகுல் ஹ்மீது
4.எயியாகான்
5.ரபீக்
6.நசுருதீன்
7.முஹம்மது னைநா
8.முஹம்மது அலி

இவர்களில் ‘எ’ குரூப்பில் உள்ளவர்கள் எம்.எம்.எஸ்., ஜலீலா முகைதீன்,என்.ஆர், ஆதரவவளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, January 07, 2008

கா.மு.ஆண்கள்.மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக கூட்டம்

0 comments
காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி நிர்வாக கூட்டம் திங்கள் கிழமை மதியம் 2.00 மணிக்கு நடந்தது. பள்ளி தாலாளர் முஹம்மது அஸ்லம் ஆசிரியர்களின் கவனக்குறைவு, மாணவர்களின் மதமோதல் போக்குபற்றி தலைமை ஆசிரியர் ஹாஜி முஹம்மது அவர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்களை மதமோதல்களுக்கு தூண்டிவிடும் ஒரு சில மாணவர்களை,
ஆசிரியர்களை, அவர்களின் பணியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார், தாலாளர் முஹம்மது அஸ்லம் அவர்கள்.

2003 ஆண்டு முதல் பள்ளியின் 10,12ம் வகுப்புகளின் மாணவர்களின் விழுக்காடு தரம் குறைவாக உள்ளது. பள்ளியின் வளர்ச்சியின் தரமும் அண்மை வருமாக குறைவாக உள்ளது. கடந்த ஆண்டைவிட மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக உள்ளது.

ஒரு சில ஆதாயம் தேடும் அமைப்புகள்,(எல்லா அமைப்புகளும்) மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது நிகழ்வாகிவிட்டது. மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை இல்லாத இந்த அமைப்புகள் எந்த நன்மைகள் செய்ய வில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்ரே !


பல அமைப்புகளும் இருந்தும் மாணவர்களுக்கு என்ன செய்தார்கள். என்பதை எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
மாணவர்கள் தங்கள் பள்ளி படிப்பின் மீது அக்கறை இல்லாத பட்சத்தில் அம்மாணவன் பள்ளிக்கு தேவையா ! நீங்களே சொல்லுங்கள்

வருகிற 10,12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வின் நாட்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் பள்ளியில் சிறந்த மாணவானகவும், அதிக மதிப்பெண்கள் பெற்று, உங்களை உலகிற்கு அறிமுகம் செய்த பெற்றோர்களுக்கும்,படித்த பள்ளிக்கும்,அனைத்து மாணவர்களுக்கும் உதாரணமாகவும்,வெற்றியின் முகமாகவும் இருக்க இறைவனை வேண்டுவோமாக !

பெற்றோர்கள் கவனத்திற்கு அரையாண்டுத்தேர்வு முடிந்து அனைத்து மதிப்பென்கள் அறிவிக்கப்படுவிட்டன.தங்கள் பிள்ளைகளின் மார்க் சரிசெய்யும்படி கேட்டுகொள்கிறோம். மாதாந்திர பெற்றோர்களின் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவருகிறது. அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும்படி வேண்டுகிறோம்.

அதிராம்பட்டினம் போரூராட்சி

0 comments


அதிராம்பட்டினம் போரூராட்சியின் சார்பாக அனைத்து தூய்மையின் விளக்க கிராமத்து நடனம் மற்றும் விளக்க பொதுகூட்டம் திங்கள் கிழமை மாலை 6.30 மணிக்கு நடந்தது.ஏராளமான பொதுமக்களுக்கு தூய்மையின் சிந்தனைகளை எடுத்துரைத்தனர்.மேலும் பல கருத்துகளும் மக்களிடம் வினவினர். தூய்மையில்லாமல் உள்ளதால் ஏற்படும் விளைவுகளும், பாதகம் போன்றவற்றை கூறினார்கள்


Sunday, January 06, 2008

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் மாணவர் கழக சிறப்புக் கூட்டம்

0 comments
31.12.2007 திங்கள் காலை 11 மணியளவில் ந. பூபதி நினைவு பெரியார் படிப்பகத் தில் மாநில திராவிடர் மாண வர் கழக அமைப்பாளர் ரெ. ரஞ்சித்குமார் தலைமையிலும், தஞ்சை நகர தலைவர் ப. தேசிங்கு, தஞ்சை ஒன்றிய தலைவர் மு. சேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அனைவரையும் வரவேற்று தஞ்சை ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கி. சௌந்தரா சன் உரையாற்றினார். தொடர்ந்து தஞ்சை மாவட்ட மாணவரணி செயலாளர் சி. பெரியார்மணி, பட்டுக் கோட்டை மாவட்ட மாணவ ரணி செயலாளர் சி. இரமேஷ், பட்டுக்கோட்டை மாவட்ட மாணவரணி துணைத் தலை வர் கோ. பிரபாகரன் மன்னார் குடி யுவராஜ், மாநில மாண வரணி அமைப்பாளர் ரெ. ரஞ்சித்குமார் ஆகியோர் உரை யாற்றிய பின் மாநில மாணவ ரணி ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் இரா. குணசேகரன் தொடக்கவுரை யாற்றினார்.

செயலவைத் தலைவர் இராசகிரி கோ. தங்கராசு கருத் துரையாற்றினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு `திராவிடர் மாண வர் கழகம் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.



கூட்டத்தில் தஞ்சை இரா. செயக்குமார், தஞ்சை நகர பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி தலைவர் சுந்தர சாம் பசிவம், செயலாளர் ஆசிரியர் கோபு., பழனிவேல், கழக பேச் சாளர்கள் பெரியார் செல்வம், பூவை. புலிகேசி பெரியார் படிப்பக செயலாளர் கை. முகிலன், தஞ்சை நகர பகுத் தறிவாளர் கழக நகர செய லாளர் புலவர் சாமிநாதன் தஞ்சை மாவட்ட ப.க., தலை வர் கோ. கண்ணையன், உரத்த நாடு ஒன்றிய மாணவரணி தலைவர் ச. பிரபாகரன், செய லாளர் க. மணிகண்டன் அமைப்பாளர் இரா. மோகன் தாஸ், தஞ்சை மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி மாணவரணி தலைவர் தி. பன்னீர்செல்வம், தஞ்சை நாராயணசாமி, பெரி யார் மணியம்மை பல்கலைக் கழக மாணவர்கள், பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், மன்னர் சரபோசி அரசு கல்லூரி மாணவர்கள், கரந்தை கலைக் கல்லூரி மாணவர்கள், சேரியர் தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெருமளவில் கலந்துக் கொண்டு கருத்துக்களை கேட்டனர்.

தஞ்சாவூர் மற்றும் பட் டுக்கோட்டை மாவட்டத்திற்கு திராவிடர் மாணவர் கழக புதிய பொறுப்பாளர்களை திராவிடர் மாணவர் கழக மாநில அமைப்பாளர் ரெ. இரஞ்சித்குமார் வாசித்தார்கள்.
தஞ்சை மாவட்டம்: தலைவர்: சி. பெரியார்மணி; செயலாளர்; எம். மனோ விஜயன், அமைப் பாளர்: சி. பெரியார்மணி.
தஞ்சை நகரம்: தலைவர்: தமிழ்நிலவன்; செயலாளர்: வினோத்.
பட்டுக்கோட்டை மாவட்டம்: தலைவர்: சி. இரமேஷ்; செய லாளர்: இரா. மோகன்தாஸ்; அமைப்பாளர்: கோ. பிரபா கரன்; துணைத் தலைவர்: ரெ. யுவராஜ்; துணைச் செயலாளர்: கே. திலீபன்.
உரத்தநாடு ஒன்றிய திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர்: ஆர். அரவிந்த்.
உரத்தநாடு அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர்: மா. மகேஸ்வரன்.
இறுதியாக தஞ்சை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சி. திராவிடமணி நன்றி கூறினார்.

மார்ச் 27 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது +2 தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடக்கம் அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிவிப்பு

0 comments
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் மாதம் 3 ஆம் தேதி முதலும், 10 ஆம் வகுப்பு - எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதலும் தொடங்கும் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் நேற்று அறிவித்துள்ளது.
இத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை இயக்ககம் வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
3-3-2008 தமிழ் முதல் தாள்
4-3-2008 தமிழ் இரண்டாம் தாள்
6-3-2008 ஆங்கிலம் முதல் தாள்
7-3-2008 ஆங்கிலம் இரண்டாம் தாள்
10-3-2008 இயல்பியல், வணிகவியல்
11-3-2008 புவியியல்
12-3-2008 வணிக கணிதம்
13-3-2008 வேதியியல்
14-3-2008 அக்கவுன்டன்சி
15-3-2008 உயிரி வேதியியல், ஹோம் சயன்ஸ், நர்சிங் உள்ளிட்ட 5 பாடங்கள்.
17-3-2008 கணிதம், விலங்கியல்
18-3-2008 பொருளாதாரம்
20-3-2008 உயிரியல், தாவரவியல், வரலாறு

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
27-3-2008 தமிழ் முதல் தாள்
28-3-2008 தமிழ் இரண்டாம் தாள்.
31-3-2008 ஆங்கிலம் முதல் தாள்
1-4-2008 ஆங்கிலம் இரண்டாம் நாள்
4-4-2008 கணக்கு
8-4-2008 அறிவியல் 10-4-2008 சமூக அறிவியல்
மெட்ரிக்குலேஷன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. பாடத் திட்டங் களின்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முடிவடை கின்றன.

Thanks : Khan Brothers

Saturday, January 05, 2008

கார் டிரைவர் தற்கொலை

0 comments
அதிராம்பட்டினம் கரையூர் தெருவைச்சார்ந்த மைனர் என்பவர் வயது30. இன்று 05/01/08, இரவு 7.30 மணிக்கு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் அதிரை பஸ் ஸ்டாண்டில் உள்ள டெக்ஸிமார்க்கெட்டில் கார் ஓட்டுனாராக உள்ளார். தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சனை மற்றும் கார் ஸ்டாண்டில் உள்ள மற்ற ஒட்டுனர்கள் கிண்டல் செய்ததால் வந்த விபரீதம். இதுபற்றி அதிராம்பட்டினம் காவல்துறை வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரித்து வருகினறனர்.

காதீர் முகைதீன் கல்லூரி

0 comments


அதிராம்பட்டினத்தில் இயங்கிவரும் காதீர் முகைதீன் கல்லூரி ஒரு சிறப்புவாய்ந்த கல்லூரி ஆகும்.உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்,வெளிமாநில மாணவ,மாணவிகள் சுமார் 1500 பேர் படித்து வருகின்றனர். பல பட்டப்படிப்புகள்,மேற்படிப்புகளும் உள்ளன.

கல்லூரியில் அதிகமான மாணவர்கள் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச்சார்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர். கல்லூரியில் சேரும்போது 1997ம் ஆண்டு பி.காம்,பிபிஏ,பி.எஸ்சி,ஆகிய இளநிலைபட்டபடிப்புக்கு நன்கொடையில்லாமல் சேர்த்து வந்தார்கள்.



ஆனால் மத்திய அரசின் நாக் கமிட்டியின் சார்பாக வழங்கப்பட்ட பி++
ஸ்டார் என்ற அந்தஸ்து.இதனால் கல்லூரியின் தரம் உயர்ந்து உள்ளது என்று நினைக்காதீர்கள்,மாணவ,மாணவிகளின் கல்லூரி கட்டணம் தான் உயர்ந்தது.இதனால் பல மாணவர்கள் கல்லூரியை விட்டு வேறு கல்லூரிக்கு சென்றதை நாம் பார்கக முடிகிறது.

மாணவர்கள் கல்லூரி முதல்வர் சந்தித்தார்கள் பலன் இல்லை.அடுத்த முயற்சி கல்லூரி தாளார்.அஸ்லம் அவர்களை சந்தித்தார்கள். ஆனால் பணம் கட்டினால்தான் படிக்கலாம் இல்லையென்றால் படிப்பை நிறுத்தி விடுங்கள் என்ற வார்த்தையினால் மாணவர்கள் போரட்டட்த்தில் ஈடுபட்டனர்.
கல்லூரிக்கு எதுவும் செய்யாத நிர்வாகம் தேவையா என்று தோன்றுகிறது.
பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள நிர்வாகத்தை கேட்க யாரும் ஊரில் இல்லை என்பதை காட்டுகிறது.
அரசு வேலை என்ற பெயரில் கணிததுறை அப்பாஸ், தமிழ்துறைகபீர்,வரலாற்றுத்துறை சபீரா பேகம் ஆகியோரிடம் 1 லட்சம் வாங்கியது கல்லூரி நிர்வாகம்.




ஆனால் மாணவர்களின் நலனில் அக்கரையில்லாமல் உள்ளது கல்லூரி நிர்வாகம். கணிப்பொறி துறையில் சரியான கம்ப்யூட்டர் கிடையாது,அதேபோல சரியான வகுப்பு கிடையாது அரபித்துறைக்கு,சரியான லேப் கிடையாது வேதியியல் துறைக்கு, பல திட்டங்கள் செயல்படுத்தாமல் உள்ளது.கம்ப்யூட்டர்க்கு தேவையான ஜெனரட்டர் வசதி கிடையாது.
பல வசதிகளை செய்தவுடன் மாணவர்களிடம் வாங்கட்டும் கல்லூரி தொகைகளை.
இதைனை கேட்பதற்கு யாரும் இல்லையா !


குறைகள் இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும் : adirampattinam@rediffmail.com

Friday, January 04, 2008

அதிரை செல்லியம்மன் கோவில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர்

0 comments

அதிரையில் 6 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி சேலை

0 comments
அதிரையில் 6 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.எதிர்வரும் 15ம் தேதி பொங்கள் பண்டிகையை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு தமிழக அரசின் அரசின் ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.

அதிராம்பட்டித்தில் அனைத்து 21 வார்டுகளிலும் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.முன்னதாக இத்தொடக்கத்தை 1 வார்டு கவுன்சிலர்,சேர்மன் எம்.எம்.எஸ்.அப்துல் வாஹப் அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.

02.01.08 அன்று அனைத்து ரேஷன்கடைகளிலும் ஏழை மக்களுக்கு வெள்ளம் மற்றும் பச்சை அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.

நன்றி : கதர் மற்றும் செழியன்.

Thursday, January 03, 2008

இந்தியாவில் VOIP பயன்படுத்தலாமா

0 comments
இந்தியாவில் வாய்ப்களை பயன்படுத்தலாமா? வாய்ப் பயன்படுத்துவது இந்தியாவில் சட்டப்படி செல்லுபடியாகாது என்று பயமுறுத்திக் கொண்டுதானிருக்கிறார்கள். call initiation and call termination என்று இரண்டு வகை உண்டு. PSTN (Public switch telephone network) என்று சொல்லப்படுவது யாதெனில் நமது டெலிபோன் எக்ஸேஞ்ச் வழியாக இயங்கும் தொலைப்பேசிகள். இணையத்தின் வழியாக callகளை தொடங்கி(call initiation) எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் பேசுவது, ஒரு கணனியிலிருந்து இன்னொரு கணனிக்கு பேசுவது TRAI (Telephone Regulatory Authority of India)-ஐ பொருத்தவரை சட்டப்படி செல்லுபடியாகும். தொலைதூர கால்களை இந்தியாவின் PSTN-ல் (call termination) முடிவடையச் செய்வது மட்டும் சட்டப்படி குற்றமாகும். call termination என்று சொன்னால் இந்த காலத்தில் மென்பொருளில் இயங்கும் PBX-கள் வந்து விட்டன. மென்பொருள் PBX-களை வைத்துக் கொண்டு இணையத்தின் வாயிலாக அதாவது வாய்ப் வழியாக உலகத்தில் எங்கோ ஆரம்பித்த callகளை இந்தியாவின் தொலைத்தொடர்பு எக்ஸ்சேஞ்களுக்கு அனுப்பி லோக்கல் ரேட்டில் வெளிநாட்டிலிருந்து பேச அனுமதிப்பது மட்டும் சட்டப்படி குற்றமாகும்.மென்பொருள் மற்றுமல்ல VOIP சுவிட்சுகளையும் பயன்படுத்தி இந்த கால் டெர்மினேசன் பண்ணலாம்

தொலைதொடர்பு துறைக்கு இருக்கும் ஒரே நியாயமற்ற கவலை வாய்ப்களால்(VOIP) தொலைத் தொடர்பு துறை நசுங்கி விடுமோ என்ற பயம் தான். கால் டெர்மினேசனுக்கு வாங்கும் கனெக்ஷன் fee -கள் அதிகமாக இருப்பதால் எந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு பேசினாலும் மற்ற நாடுகளுக்கு பேசும் விலையை விட அதிகமாகவே இருக்கும். நாளைய உலகை ஆளப்போவது வாய்ப்கள் தான். வாய்ப்பின் அடுத்த முன்னேற்றம் மொபைல் வாய்ப் கள். நோக்கியாவின் N95 முதலான மொபைல்கள் இணையத்தை wi-fi மூலமாக தொடர்பு கொள்ளும் வசதி உண்டு. இந்த வசதி mobile voip-களுக்கான வித்தாக அமைகிறது. இன்னும் சிறிது காலத்தில் எங்கும் கம்பியில்லா இணையத்தொடர்பாகி(wi-fi) விடும் போது, mobile voip-கள் கொடுக்கப்போகும் வாய்ப்புகள் ஏராளம் என்பது மட்டும் உறுதி.

இந்தியாவில் இன்னும் அமெரிக்கா, ஐரோப்பா போல புற்றீசல் கிளம்பிய மாதிரி வாய்ப் கம்பெனிகள் கிளம்பவில்லை என்பதற்கு TRAI -ன் நியாயமற்ற பயமும், வாய்ப் கம்பெனிகள் மீதான வரி விதிப்புகளும் தான். இந்தியாவிலிருந்து Tringme.com -ன்னு ஒரு வாய்ப் கம்பெனி வச்சிருக்கிறவரு என்னமா கவலை பட்டிருக்கருன்னு இங்கே பாருங்க. இருந்தாலும் இந்தியாவில் போன்வாலா முதல் கொண்டு சிஃபி டாக் வரை எல்லோரும் 1 ரூபாய் அல்லது 2 ரூபாயில் உலக நாடுகளை அழைக்கும் வசதியை கொண்டு வந்து விட்டது. இந்தியாவிலிருந்து உலகநாடுகளுக்கு வாய்ப் சர்வீஸ்களை கொடுக்கும் ஒரு பெரிய லிஸ்ட் இங்கே… MTNL-ன் வாய்ப் சர்வீஸ் பற்றி இங்கே….

அதனால் இந்தியாவிலிருந்து VOIP-ல் பேசுவது சட்டப்படி செல்லும்.

இணையம் குறித்த சில தகவல்கள்

0 comments
1. 1957ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை ரஷ்யா விண்ணில் ஏவியது. இது அமெரிக்க அரசாங்கத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அறிவியல் துறையிலும், ராணுவத் துறையிலும் தனது மேலாண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. இதற்காக ஆர்பா (ARPA) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தியது. இந்நிறுவனம் வான்வழியாக அமெரிக்க ராணுவ மையங்களின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருக்கும் ராணுவ மையம் தாக்கப்பட்டால், அதில் இருக்கும் முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் எதிர்த் தாக்குதல் கொடுக்க அந்த தகவல்கள் மற்ற ராணுவ மையங்களுக்கு தேவைப்படும். எனவே ராணுவ மையங்களுக்கு இடையே ஒரு தொடர்பு வலையை ஏற்படுத்தி அதில் தகவல்களைப் போட்டு வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

சோதனை முயற்சியாக 1969 அக்டோபர் மாதம் இரண்டு கல்வி நிறுவனங்களில் இருக்கும் கணினிகள் தொடர்பு வலை மூலம் இணைக்கப்பட்டன. படிப்படியாக இந்த ஆராய்ச்சி முன்னேற்றமடைந்து, அமெரிக்க ராணுவ மையங்களுக்கிடையே ஒரு முழுமையான தொடர்பு வலை ஏற்படுத்தப்பட்டது. 1990ல் வட அமெரிக்காவில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தொடர்பு வலைக்குள் கொண்டு வரப்பட்டன. இந்த தொழில்நுட்பம் ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. 1990களுக்குப் பின் ஏற்பட்ட கணினித் துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சிக்குப் பின், இணையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தன்னிச்சையான அமைப்புகளிடன் அமெரிக்க அரசு வழங்கியது. இதற்குப் பிறகுதான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இணையமும், இணையதளங்களும் உருவாயின.

2. 1970ம் ஆண்டு ரே டாம்லின்சன் என்பவர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுதான் மின்னஞ்சல் அனுப்பப் பயன்படும் மென்பொருளை முதன் முதலில் தயாரித்தது.

3. 1988ல் ஜார்க்கோ ஓகரினென் என்ற பின்லாந்துக்காரர் IRC எனப்படும் மின் அரட்டை (chat) மென்பொருளைத் தயாரித்திருக்காவிட்டால், ‘காதலர் தினம்’ படத்தைப் பார்க்கும் துன்பத்திலிருந்து பெரும்பான்மையான தமிழர்கள் தப்பித்து இருப்பார்கள்.

4. ஜூன் 8, 2006ம் தேதி கணக்குப்படி 85,541,228 இணைய தளங்கள் உள்ளன.

5. 100 அமெரிக்கர்களில் 69 பேர் இணையத்தைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இந்த விகிதம் ஜப்பானில் 100க்கு 67 ஆகவும், ஜெர்மனியில் 100க்கு 61 ஆகவும் உள்ளது. சீனாவில் 100க்கு 9 ஆகவும், இந்தியாவில் 100க்கு 5 ஆகவும் உள்ளது.

6. உலகில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் இணைய தளமாக yahooவும், அதற்கு அடுத்தபடியாக google, amazon இணைய தளங்களும் உள்ளன.

7. 1994ல் e-shopping என்று அழைக்கப்படும், இணையம் மூலம் பொருட்களை வாங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், பெண்களை ஆண்கள் தான் இணையம் மூலமாக அதிகம் பொருட்களை வாங்குகிறார்கள். ஆண்கள் கணினி, இசை குறுந்தகடுகள் ஆகியவற்றையும், பெண்கள் துணிகளையும அதிகளவு வாங்குகிறார்கள்.

8. அதே ஆண்டு அக்டோபரில் தான் இணைய தளங்களில் விளம்பரம் செய்வதும் அறிமுகமானது. முதல் விளம்பரம் hotwired.com என்ற இணையதளத்தில் இடம்பெற்றது. 1997ல் 400 மில்லியன் டாலர்கள் இணைய விளம்பரங்களில் முதலீடு செய்யப்பட்டது. 2000ல் அது 4.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.

9. 1995 செப்டம்பர் மாதம் வரை domain name என்றழைக்கப்படும் இணையதள முகவரிகள் பெறுவது இலவசமாகவே இருந்தது. கட்டண சேவை முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, domain name விற்பனை என்பது பரபரப்பான வியாபாரமாகி விட்டது. முக்கியமான நிறுவனங்களின் பெயர்களின் இணையதள முகவரிகளை முன்பதிவு செய்து கொண்டு, அந்த நிறுனங்களிடம் பேரம் பேசுவது அதிகமானது. 1997ல் business.com என்ற இணையதள முகவரி 150,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Wednesday, January 02, 2008

புத்தாண்டு விழாவில்

0 comments
மும்பையில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் மும்பை ஜுகு கடற்கரை அருகே மான பங்கப்படுத்தப்பட்டனர்.இதுபோன்று,கடந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தெற்கு மும்பையிலும் நடந்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.







இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

Tuesday, January 01, 2008

வாகன ஆய்வாளர் அலுவலகம்,பட்டுக்கோட்டை

0 comments


பட்டுக்கோட்டை சுற்றுவட்டார மக்களின் அதிகமாக உள்ள ஒன்று இரு மற்றும் மூன்று சக்கர வாகனம் தான்.அதிரையை பொருத்தவரை வயது வரம்பு இன்றி கிடைத்தவாகனங்களையெல்லாம் ஒட்டுகின்றனர்.

ஆனால் முறையான சான்று இல்லாமல்( certification of registration ,Insurance,Driving Licence)

ஒரு சில பேர்தான் முறையான சான்றுகளை வைத்து வாகனம் ஒட்டுகின்றனர்.

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு நிறுவியுல்ல போக்குவரத்து துறை மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வந்தும் DrivingLicence.

எடுப்பதற்கு அலட்சியம் காட்டும் நிலைமையை தான் பார்க்கிறோம்.

காவல்துறை வாகன தனிகையில் ஈடுபடும்போது இளைஞர்கள் பணத்தை அளவுக்கு அதிகமாக கொடுத்துவிட்டு வரும் நிலையை தினமும் பார்க்கிறோம்.


எப்படி Passport Office,Trichy.செல்லும் ம‌க்க‌ள் ப‌க்க‌த்தில் உள்ள‌ இடத்திற்கு சென்று உங்க‌ளுக்காக‌ ஒரு Driving Licence எடுத்து வைத்திருப்ப‌து அனைத்து ப‌ய‌ன்பாடிற்கு உத‌வும்.

வாக‌ன‌த்தை சரியாக‌ ஒட்டுவோம்! சாலை விதிகளை ம‌தித்து ஓட்டுவோம்!