Wednesday, January 16, 2008

அதிராம்பட்டினத்தில் யாஸ்மின் தனியார் சொகுசு பேருந்து

0 comments
அதிராம்பட்டினத்தில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான யாஸ்மின் தனியார் சொகுசு பேருந்து மீண்டும் 15/01/08 அன்று இரவு 8.30 முதல் இயக்கப்பட்டுவருகிறது. இப்பேருந்தில் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து பட்டுக்கோட்டை,மன்னார்குடி,திருவாரூர்,மயிலாடுதுறை,பாண்டிச்சேரி வழியாக சென்னை செல்கிறது.

சென்னை செல்ல ஆகும் செலவு படுக்கை வசதிக்கு ரூபாய் 310ம் சாதரண டிக்கேட் ரூபாய் 260 வசூலிக்கப்படுகிறது.

தொடர்ப்புக்கு :
யாஸ்மின் டிரவல்ஸ்
ஜாவியா ரோடு
அதிராம்பட்டினம்
செல் : 9944783338

நன்றி : கான் பிரதர்ஸ், அதிரை

அதிராம்பட்டினத்தில் பொங்கள் திருநாள்

0 comments
அதிராம்பட்டினத்தில் தமிழர் திருநாள் பொங்கள் திருநாள் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக மக்கள் காலை சூரியனுக்கு முன் பொங்கள் வைத்து சூரியனை வழிபட்டனர்.
அதேபோல் சுற்று பகுதிகளிலும் பொங்கள் திருநாளை கொண்டாடினர்.
தைப்பொங்களை முன்னிட்டு கரும்பு கட்டுகளின் விலை அதிகமானதால் மக்கள் யாரும் கரும்புகட்டுகள் வாங்க முன்வரவில்லை. ஒரு கரும்பு கட்டின் விலை ரூபாய் 150ஆக இருந்தது. அனைத்து வீடுகளிலும் காலை வீட்டின் முன் பூக்கோலம் பொட்டு தைப்பொங்களை கொண்டாடினர்.
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழர்திருநாளை சமத்துவ பொங்கள் தினமாக கொண்டாட கேட்டுக்கொண்டார்கள். முதல்வர் சொன்னதுபோல் அனைத்து ஊராட்சி,பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி அலுவலங்களிலும் சமத்துவபொங்கள் கொண்டாடப்பட்டது. அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்திலும் சமத்துவபொங்கள் கொண்டாடப்பட்டது. தலைவர் அய்யா அப்துல் வஹாப் தலைமை ஏற்று துணைத்தலைவர்,வார்டு கவுன்சிலர்கள்,அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலுல் காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சமத்துவ பொங்கள் கொண்டாடப்பட்டது.




இன்று காணும்பொங்களை முன்னிட்டு முத்தம்மாள் தெரு, கறையூர் தெரு,காந்திநகர்,தரகர் தெரு,செட்டித்தெரு,மிலாரிக்காடு, கரிசைக்காடு,ஏரிப்புறக்கரை,பலஞ்சூர்,புதுக்கோட்டைஉள்ளூர்,மகிழங்கோட்டை,தொக்கலிக்காடு,ராஜமடம்,கொள்ளுக்காடு ஆகிய அதிரை சுற்று வட்டார பகுதிகளில் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள்,போட்டிகள் போன்றவைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.



மாட்டுப்பொங்கள் நடுவிக்காடு, பள்ளத்தூர்,பேராவூரணி,தம்பிக்கோட்டை,துவரங்குறிச்சி பகுதிகளில் நடைபெறவுள்ளன.
அனைத்து மதத்தினரும் பங்குகொண்ட சமத்துவபொங்கள் பட்டுகோட்டையில் உள்ள வடசேரி ரோட்டில் நடைபெற்றது. மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.




செய்தி : நண்பர்கள் குழு

Tuesday, January 15, 2008

கிழக்கு கடற்கரை சாலை ECR ROAD PROJECT

0 comments
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை முடியும் தருவாயில் உள்ளது. சில இரயில்வே மற்றும் பாலங்கள் போடப்பட்டுவருகின்றன. பாதி வேலைகள் முடிந்த நிலையில் மக்களிடைய பல கருத்துக்கள் நிலவுகின்றன. அவற்றில் சில;

• அதிரை பேருந்து நிலையத்தில் சுற்று பாதை அமைக்கவில்லை( ரவுண்டான) போன்றவவகள் அமையவில்லை.
• அதிரை காலேஜ் ரோடு அருகில் நிலையான பாலம் அமைக்க வில்லை.
• போக்குவரத்து அதிகமான இடங்களில் எந்த பாதுகாப்பு சிக்னல்கள் கிடையாது.
• ஊர்களின் கிலோமீட்டர்கள் போர்டுகள் அமைக்கவில்லை.
• ரோடுகளின் ஒரங்களில் மரங்கள் நடப்படவில்லை.
• அதிரை-ராஜமடம் மோசமான அதிகமாக விபத்துபகுதியாக உள்ள வலைவு உள்ளது. அந்த பாதையை மாற்றி அமைக்கவில்லை.
• தம்பிக்கோட்டை அருகே சீரான வழியில் ரோடுகள் போடமால் உள்ளது.
* மழை காலங்களில் முத்தம்மாள் தெரு,பிலால் நகர்,புதுத்தெரு, ஆகிய பகுதிகள் இந்த ரோடுகளின் காரணமாக பாதிக்கப்படும் நிலையில் சாலைகள் போடப்பட்டுள்ளது.






இதுபோன்ற உங்களது பகுதிகளில் இருந்தால் அல்லது எந்த கோரிக்கையாக இருந்தாலும் நெடுஞ்சாலைத்துறை, இர்கான் இண்டர்நேசனல் நிர்வாகத்தினரிடம் தெரிவிக்க முகவரி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எந்த குறைகள் இருந்தாலும் தெரிவிக்கவேண்டுகிறோம்.

Addl. General Manager
IRCON International Limited
TNSRP - 02 Project office,
41, Mannai Road, Near Police Quarters,
Muthupet Distt. - Thiruvapur (T N) - 614 704
Tel: 0091-4369-261513,
Mob.: 09444377575
Fax: 0091-4369-262499


THIRU. K.ALLAUDIN, I.A.S
SECRETARY TO GOVERNMENT,
HIGHWAYS DEPARTMENT,
FORT ST. GEORGE,
SECRETARIAT, CHENNAI - 9. 91 - 044 - 2567 0959




இதேபோல் அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை சாலையை விரிவுபடுத்தப்பட்டுவருகிறது. ஆக்கிரமிப்பு நிலங்கள் சர்வே எடுத்து வருகிறார்கள்,நெடுஞ்சாலைத்துறை. விரிவுபடுத்தப்படும் சாலையில் ஒரத்தின் எல்லைகள் குறிக்கப்பட்டுவருகின்றன.

Monday, January 14, 2008

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

0 comments

கர்மவீரர் காமராஜர் விருது பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.மாரிமுத்து அய்யா அவர்களுக்கு வழங்கப்படுகிறது

0 comments


பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.மாரிமுத்து அய்யா அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் சிறந்த மனிதர்களுக்கான காமரஜர் விருது வழங்கப்படுகிறது.இவ்வாண்டிற்கான கர்மவீரர் காமராஜர் விருது பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.மாரிமுத்து அய்யா அவர்களுக்கு விருதும் 1 லட்ச ரூபாய்கான காசோலை வழங்கபடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மரண அறிவிப்பு

0 comments
அதிராம்பட்டினம் காலியார் தெருவைச் சார்ந்த தொப்பிக்கார வீட்டு மர்ஹும். அபுல் ஹசன் அவர்களின் மகனாரும், காய்கறிக்கடை உதுமான்,மர்ஹும் ஆபுபக்கர்,மர்ஹும் கபீர்,மர்ஹும் அலி ஆகியோரின் சகோதராகிய உமர்தம்பி அவர்கள் இன்று 14/01/08 அன்று காலை 8.45 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்கள்.அன்னாரின் ஜனஷா இன்று மாலை 4.30 மணிக்கு ஜும்மாபள்ளி மையவாடியில் நல்ல அடக்கம் செய்யப்படும்.


கடற்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹும்.முகைதீன் பிச்சை கனி அவர்களின் மகனும், வரிசை என்கின்ற யாக்கூப் அலி,அஜ்மல்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய, புகாரி,நாகூர் பிச்சை, சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரருமாகிய, பசீர், அலி தம்பி மரைக்கான் ஆகியோரின் மாமனாருமாகிய, கே.டி.என். நெய்னா முகம்மது அவர்களின் சாச்சாவுமாகிய ஹவ்லியா முகம்மது அவர்கள் இன்று 14/01/08 மாலை 5. மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்கள் அன்னாரின் ஜனஷா இன்று இரவு 9.மணிக்கு கடற்கரைத்தெரு மையவாடியில் நல்ல அடக்கம் செய்யப்படும்.


நன்றி : கான் பிரதர்ஸ்

அதிராம்பட்டினத்தில் தொடர் திருட்டு

0 comments
அதிராம்பட்டினத்தில் தொடர் திருட்டு நடைபெற்றுவருகிறது. கடந்த 2 வாரங்களாக பல தண்ணீர் மோட்டார்கள்,இரு சக்கர வாகனங்கள்,சைக்கிள்கள் போன்று திருடப்பட்டுவருகிறது.இதே போல் வண்டிப்பேட்டை, ராஜமடம்,செட்டித்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளன.ஏற்கனவே காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தும் இன்னும் எந்த நபர்களும் கைது செய்யப்படவில்லை.
இதேபோல் பல தெருக்களிலும் திருட்டு கும்பல் கைவரிசையை காட்டி வருகிறது. சிஎம்பி லைன்,நெசவுத்தெரு,கீழத்தெரு ஆகிய பகுதிகளிலும் பல பொருட்கள் திருட்டு போய் உள்ளன.ஆனால் இதுவரைக்கும் யாரும் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை.

நெசவுத்தெருவில் உள்ள அல்தாப் என்ற வீட்டில் ஒரு செல் போன் திருட்டுபோய் உள்ளது நேற்று மாலை.
பல மோட்டார்கள் திருடப்பட்டுவருகின்றன. பல தெருக்களில் இரவு நேரங்களில் திருடர்களை பிடிப்பதற்காக காத்திருக்கின்றனர்.
உங்களது வீடுகளையும் சுற்று புற வீட்டுகளையும் இரவு நேரங்களில் உங்கள் பார்வையில் இருக்கட்டும். மேலும் இரவு நேரங்களில் சந்தேகம் எற்படும் படி யாராக இருந்தாலும் விசாரித்துக்கொள்வது நல்லது. இரவு நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் உடனே மின் வாரியத்திற்கு தொடர்பு கொள்ளவேண்டுகிறோம்.அதேபோல் சந்தேக நபர்களை பிடித்தால் உடனே காவல் துறை அல்லது பகுதி ஜமாத் தலைவர்களிடம் ஒப்படைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து முதல்வருக்கு கோரிக்கை.

0 comments



நன்றி : தினகரன் தஞ்சை பதிப்பு

Saturday, January 12, 2008

ஊனமுற்றோருக்கான உதவித்தொகை திட்டம்

0 comments
அதிராம்பட்டினத்தில் உள்ள ஊனமுற்றோர் சங்கத்தின் செயாலளர் ஏ.பஹாத் முஹம்மது மற்றும் ஊனமுற்றோர் சங்கத்தின் தலைவர் கரையூர் தெரு மாரிமுத்து அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துறை செய்த 25க்கும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 08.01.08 அன்று ஆட்சியர் விஜயராஜ்குமார் அவர்கள் வழங்கினார்கள். இதற்கு முன்பு ஆட்சியர் நேரடி ஆய்வின் கீழ் அனைவரும் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் பூவாணம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் மனஅழுத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவரை இலவச சிகிச்சைக்காக பெங்களுர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.
அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து ஊனமுற்றோர்களும் அடையாள அட்டை, தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்படும் உதவித்தொகையை பெற முன்வருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். ஊனமுற்றோருக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்திவருவதால் அனைத்து ஊனமுற்றோர்களும் இதில் பயனைஅடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

அதிராம்பட்டினம் ஊனமுற்றோர் சங்க தலைவர் மாரிமுத்து, செயாலளர் பஹாத் முஹம்மது, வெற்றிலைக்காரத் தெரு அதிரை.

அனைத்து ஊனமுற்றோர்களும் தொடர்புக்கு செல்: 9865939831

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகச்செய்தி

0 comments
எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்ற இளைஞசர்களுக்குக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற விரும்புவோர் கல்வித்தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும்.மனுதரார் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் 2007 டிசம்பர்31 அன்று 45 வயதை கடந்தவராக இருக்க கூடாது.இதர வகுப்பினர் அதேபோன்று 40 வயதை கடந்தவராக இருக்க கூடாது.மனுதாரர் குடும்ப வருமானம் மாதம் ரூபாய் 2 ஆயிரத்திற்கு அதிகமாக இருத்தல் கூடாது. மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி மாணவ,மாணவியராக இருத்தல் கூடாது.தொலைத்தூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். சுயமாக எவ்வித சுயதொழில் செய்பவராகவோ பணம் ஈட்டுபவராகவோ இருத்தல் கூடாது. விண்ணப்ப படிவங்கள் அலுவலக நாளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படும்.2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அனைத்து அலுவலக நேரங்களிலும், அனைத்து நாட்களிலும் மனுதாரர் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவம் பெற வருவோர் வேலைவாய்ப்பு அடையாள அட்டை,பள்ளி,கல்லூரி சான்றிதழ்,மாற்று சான்று ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இத்தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகள் ஆகியும் வேலையில்லாத இளைஞர்கள் இந்த உதவித்தொகைகான விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுக்கும்படி கேட்டுகொள்கிறோம்.

Friday, January 11, 2008

அதிரையில் தவ்ஹீத் ஜாமத்தின் கண்டன ஆர்பாட்டம்

0 comments



அதிராம்பட்டித்தில் தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக 11/01/08 அன்று மாலை 5 மணி அளவில் குஜராத் முதல்வர் மோடி தமிழக வருகையை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடந்தது. இதில் இவ்வவைப்பின் தொண்டர்கள் பல்வேறு கோஷங்கள் மோடியை எதிர்த்தும்,ஜெயலலிதாவையும் எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர். பின் போலீசார் அனனவரையும் கைது செய்து அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். அங்கு மோடி மற்றும் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து கூட்டத்தில் எடுத்து கூறினர். மாலை 6.30 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.




பாரத் கல்லூரி தாலாளர் இரயிலில் அடிபட்டு இறந்தார்

0 comments
மகிழங்கோட்டையைச் சேர்ந்த நாடிமுத்து அவர்களின் மகன் கணேசன் என்பவர் 10/01/08 அன்று காலை 5.45 மணிக்கு வாக்கிங் செல்லும் போது தஞ்சையில் இரயிலில் அடிபட்டு இறந்தார். இவர் தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரி,நிர்வாகவியல் கல்லூர், மற்றும் இந்தியன் இன்ஸ்டியூட்ஆகியவற்றுக்கு தாலாளர் ஆவார். அனைத்து கல்லூரிகளையும் தஞ்சையில் நடத்தி வருகிறார்.இவர் பேராசிரியர் ஆவார்.

இவருக்கு விக்ரம் என்ற மகன் உள்ளார். அன்னாரின் இறுதி சடங்கு இன்று மாலை 3.மணிக்கு அவரது சொந்த ஊரான மகிழங்கோட்டையில் தகனம் செய்யப்பட்டது. ஏராளாமான சுற்று வட்டார பொதுமக்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய புதிய வருட பிறப்பு


நேற்று இஸ்லாமிய புதிய வருட பிறப்பு. அதிரையில் உள்ள தைக்காலில் 10 நாட்கள் சிறப்பு பயான் மற்றும் மெளத்து ஓதி ஏழை மக்களுக்கு உணவளிக்கப்படுகிறது.
அதிரையில் உள்ள இரண்டு தைக்கால்களிலும் இவை நடைபெறுகிறது கடைசி பிறை 10 ல் அனைத்தும் நிறைவுபெறுகிறது..

Thursday, January 10, 2008

அதிரை கடற்பகுதிகளை தஞ்சை சரக DIG ஆய்வு

1 comments
அதிராம்பட்டினத்தில் உள்ள கரையூர் தெரு,கடற்கரைத் தெரு,ஏரிப்புறக்கரை,கீழத்தோட்டம் ஆகிய கடல் பகுதிகளில் தஞ்சை சரக DIG ஆபாஷ்குமார்,எல்லா பகுதிகளையும் சோதனை நடத்தினார்.
விடுதலைப்புலிகளின் நடமாடுவதாக கூறப்படும் இவ்வேலையில் இவர் வருகை தந்து ள்ளார். மேலும் ராஜமடம் சோதனைச்சாவடிக்கு சென்று அங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டறிந்தார்



இதேபோல் மல்லிப்பட்டினம் கடற்படைத்தளத்திற்கு சென்று அனைத்து விவரங்களும் கேட்டறிந்தார். பின் அதிரையில் கட்டப்பட்டுவரும் கடற்படை காவல் நிலையத்தை பார்வையிட்டு தஞ்சை சென்றார்.
உடன் பட்டுக்கோட்டை எஸ்பி மருதப்பன்,அதிரை இன்ஸ்ப்பெக்டர்.கண்ணதாசன், துணை ஆய்வாளர்.மணிவண்ணன்,ஏட்டு பூமிநாதன் உடன் இருந்தனர்.

பட்டுக்கோட்டை அருகே டாக்டர் வெட்டப்பட்டார்

0 comments
மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டியை சார்ந்த பழனிவேல் என்பருக்கு கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.அருகே உள்ள மதுக்கூரில் டாக்டர்.தனபால் மருத்துவமனைக்கு வந்தனர்.டாக்டர் உடனே பட்டுக்கோட்டை செல்லுங்கள் என்னிடம் போதிய கருவிகள் இல்லை என்பதால் அங்கு செல்லுங்கள் என்றார்.
பட்டுக்கோட்டை போகும் வழியில் பழனிவேல் என்பவ ர் இ றந்தார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் டாக்டர் தனபாலை அரிவாளாலால் வெட்டப்பட்டார்.டாக்டர் உடனே பட்டுக்கோட்டை செல்லப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பத்தால் அதிர்ச்சி அடைந்த பட்டுக்கோட்டை சுற்று வட்டார டாக்டர்கள்,அனைத்து மெடிக்கல் நிர்வாகிகளும் மூன்று நாள் மருத்துவசேவை செய்யவில்லை. 09/1/08 அன்று மாலை பேரணி ஏற்பாடு செய்து பட்டுக்கோட்டை சுற்று வட்டார டாக்டர்கள்,மெடிக்கல் நிர்வாகிகள்,பாரமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து பேரணி ஆர்.டி.ஒ. அலுவலகம் வரை நடந்து சென்று வெட்டியவர்களை கைது செய்ய கோரியும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.



அதிராம்பட்டினத்திலும் அனைத்து டாக்டர்கள் போராட்டத்தினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கு உள்ளயினர்.

பட்டுக்கோட்டை டாக்டர் செல்லப்பன் அவர்களின் சகலைதான் மதுக்கூர் டாக்டர் தனபால் என்பவர் ஆவார்.

அதிராம்பட்டினத்தில் BSNL தொலைபேசிக்கான குறைதீர்க்கும் முகாம்

0 comments

அதிராம்பட்டினத்தில் BSNL PUBLIC TELEPHONE AND STD BOOTH ORGANIZATION அமைப்பின் முதன் முதலாக பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் சாரா மண்பத்தில் நடைபெற்றது. இதில் TANJORE BSNL GM,PRO, PKT And ADIRAI EXCHANGE OFFICERS கலந்து கொண்டனர். இதில்
ஏராளமான எஸ்.டி.டி மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை வரவேற்றார் இவ்வமைப்பின் தலைவர் பிரியம் சாகுல் ஹமீது அவர்கள், அடுத்து கடற்கரைத்தெரு சி.எம்.இப்ராஹிம் அவர்கள் முன்னுரை ஆற்றினார்கள். பல வற்றை எடுத்து கூறினார்கள்.



BSNL தஞ்சாவூர் தலைமை சத்தியநாரயணன் அவர்கள் BSNL அதிராம்பட்டினத்திற்கு பல சலுகைகளை வழங்கி வருவதாக கூறினார்கள்.

• அதிராம்பட்டினத்தில் 2 சப் கோப்புரங்கள் வைத்தது.
• ஆன்-லைன் கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
• டெலிபோன் பில் கட்டுவதற்கு எளிமையாக்க போஸ் ஆபிஸில் 2 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
• பிராண்பேண்ட் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
• வில் போன் கொடுக்கப்பட்டு வருகிறது.
• லைன்கள் சீராக கொடுக்கப்பட்டுவருகிறது.

என்று சத்தியநாரயணன் கூறினார்கள்.
அதிரை மக்களின் குறைகளை தெரிவிக்கும்படி கூறினார்கள்.



பின்வருமாறு கோரிக்கைகள் சொல்லப்பட்டன:

• லைன் மென்களை அதிகரிக்க வேண்டும்
• துணை கோட்ட பொறியாளர்கள் நியமிக்க வேண்டும்
• லைன்களில் ஏற்படும் இறைச்சல்
• லஞ்சம் வாங்கும் ஊழியர்கள்
• உடனே லைன் கொடுப்பதில்லை
• பிராண்பேண்ட் எண்ணிக்கையை அதிகரிப்பது
• கட்டண பில்களின் கூடுதலாக வசூலிப்பது
• Caller identification கொடுக்காமல் உள்ளது.


பின்வரும் கோரிக்கைகள் 2 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள்.
உடனே SD யாக வீரப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.



alt=""id="BLOGGER_PHOTO_ID_5153771134980996962" />
உடனே SD யாக வீரப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றும் கூடுதலான லைன்மென்கள்,உடனடி லைன்கள் கொடுக்கப்பட்டுவருகிறது.
பொதுமக்களின் குறைகளை எழுத்து பூர்வமாக வாங்கினார் மேலாளர்.

அதிராம்பட்டினம் தான் தமிழகத்தில் STD யில் 64% வருமானம் வருவதாக இது ரிக்கார்ட் என்று சொன்னவுடன் எல்லா STD ஊழியர்களும் சந்தோஷமாக காணப்பட்டனர்.

இறுதி நிகழ்வை சங்சசெயாலளர் அப்பியான் யூசுப் அவர்கள் ஆற்றினார்கள்.



Tuesday, January 08, 2008

அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையை

0 comments


அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. வாகனங்கள் அதிகமாக செல்லுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
மேலும் அனைத்து சாலைகளும் நெடுஞ்சாலைத்துறையினாரால்
சரிசெய்யப்பட்டுவருகிறது.


அதிராம்பட்டினம் தரகர் தெருவில் தேர்தல் முன்விரோதம்

0 comments
அதிராம்பட்டினம் தரகர் தெருவில் தேர்தல் முன்விரோதம் காரணமாக பல நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். தரகர் தெருவில் ‘எ’ என்ற பிரிவும், ‘பி’ என்ற பிரிவும் குரூப்காளாக செயல்பட்டுவருகின்றனர்.

இதனிடைய நடந்து முடிந்த பஞ்சாய்த்துபோர்டு தேர்தலில் மூன்று வார்டுகளில் ‘எ’குரூப் பெரும்பால இடங்களில் ஈடுபட்டு வெற்றி பெறச்செய்தனர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.

இதனிடைய ‘பி’குரூப்‘எ’குரூப்பில் உள்ள சிலர் மீது தாக்குதல் நடத்தினர். இப்போக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இப்போக்கினை அறிந்த பெரும்தலைவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாருக்கு இவ்விஷயம் அறிந்து இரு குரூப்பில் உள்ளவர்களை அலைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

சுமார் 2 வாரத்திற்கு முன்புதெருக்களில் ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கிகொண்டனர். சிலர் அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2 வாரத்திற்கு முன்பு

இதனால் அப்பகுதியில் ரிஸ்வர் போலீசார் குவிக்கப்பட்டு இன்று வாபஸ் பெற்றனர்.

பல தரகர்தெரு நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். அப்பெயர்கள் பின்வருமாறு :

குரூப் ‘எ’

1. அர்சாத்
2.னைநா முகம்மது
3.சுல்தான்
4.சுபைத்துல்லா
5.மீரா
6.ராஃபி
7.னைநாமஹம்மது
8.னைநாமுஹம்மது (கே.ம்)
9.நசீம்

குரூப் ‘பி’

1.அஹமது ஹாஜா
2.முஹம்மது காசிம்
3.ஷாகுல் ஹ்மீது
4.எயியாகான்
5.ரபீக்
6.நசுருதீன்
7.முஹம்மது னைநா
8.முஹம்மது அலி

இவர்களில் ‘எ’ குரூப்பில் உள்ளவர்கள் எம்.எம்.எஸ்., ஜலீலா முகைதீன்,என்.ஆர், ஆதரவவளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, January 07, 2008

கா.மு.ஆண்கள்.மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக கூட்டம்

0 comments
காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி நிர்வாக கூட்டம் திங்கள் கிழமை மதியம் 2.00 மணிக்கு நடந்தது. பள்ளி தாலாளர் முஹம்மது அஸ்லம் ஆசிரியர்களின் கவனக்குறைவு, மாணவர்களின் மதமோதல் போக்குபற்றி தலைமை ஆசிரியர் ஹாஜி முஹம்மது அவர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்களை மதமோதல்களுக்கு தூண்டிவிடும் ஒரு சில மாணவர்களை,
ஆசிரியர்களை, அவர்களின் பணியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார், தாலாளர் முஹம்மது அஸ்லம் அவர்கள்.

2003 ஆண்டு முதல் பள்ளியின் 10,12ம் வகுப்புகளின் மாணவர்களின் விழுக்காடு தரம் குறைவாக உள்ளது. பள்ளியின் வளர்ச்சியின் தரமும் அண்மை வருமாக குறைவாக உள்ளது. கடந்த ஆண்டைவிட மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக உள்ளது.

ஒரு சில ஆதாயம் தேடும் அமைப்புகள்,(எல்லா அமைப்புகளும்) மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது நிகழ்வாகிவிட்டது. மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை இல்லாத இந்த அமைப்புகள் எந்த நன்மைகள் செய்ய வில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்ரே !


பல அமைப்புகளும் இருந்தும் மாணவர்களுக்கு என்ன செய்தார்கள். என்பதை எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
மாணவர்கள் தங்கள் பள்ளி படிப்பின் மீது அக்கறை இல்லாத பட்சத்தில் அம்மாணவன் பள்ளிக்கு தேவையா ! நீங்களே சொல்லுங்கள்

வருகிற 10,12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வின் நாட்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் பள்ளியில் சிறந்த மாணவானகவும், அதிக மதிப்பெண்கள் பெற்று, உங்களை உலகிற்கு அறிமுகம் செய்த பெற்றோர்களுக்கும்,படித்த பள்ளிக்கும்,அனைத்து மாணவர்களுக்கும் உதாரணமாகவும்,வெற்றியின் முகமாகவும் இருக்க இறைவனை வேண்டுவோமாக !

பெற்றோர்கள் கவனத்திற்கு அரையாண்டுத்தேர்வு முடிந்து அனைத்து மதிப்பென்கள் அறிவிக்கப்படுவிட்டன.தங்கள் பிள்ளைகளின் மார்க் சரிசெய்யும்படி கேட்டுகொள்கிறோம். மாதாந்திர பெற்றோர்களின் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவருகிறது. அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும்படி வேண்டுகிறோம்.

அதிராம்பட்டினம் போரூராட்சி

0 comments


அதிராம்பட்டினம் போரூராட்சியின் சார்பாக அனைத்து தூய்மையின் விளக்க கிராமத்து நடனம் மற்றும் விளக்க பொதுகூட்டம் திங்கள் கிழமை மாலை 6.30 மணிக்கு நடந்தது.ஏராளமான பொதுமக்களுக்கு தூய்மையின் சிந்தனைகளை எடுத்துரைத்தனர்.மேலும் பல கருத்துகளும் மக்களிடம் வினவினர். தூய்மையில்லாமல் உள்ளதால் ஏற்படும் விளைவுகளும், பாதகம் போன்றவற்றை கூறினார்கள்